இந்த மெட்ரோ சேவையை இன்று மஹாரஷ்ட்ரா முதல்வர் பிரித்விராஜ் சவுகான் வெர்சோவா நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் . இந்த சேவை மூலம் 90 நிமிட பயணம் 20 நிமிடம் ஆக குறைய வாய்ப்பு உள்ளது .
இந்த சேவை இன்று தொடங்கப்பட்டாலும் , விலை நிர்ணயிப்பதில் இன்னும் பிரச்சனை நீடித்து வருகிறது . மஹாரஷ்ட்ரா அரசு நிர்ணயித்த விலையை கட்டாயப்படுத்தாவிட்டால் தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டேன் என பிரித்விராஜ் சவுகான் தெரிவித்து இருந்தார் . இன்று சவுகான் பங்கேற்று , இந்த விலை நிர்ணயம் நீதிமன்றம் மூலம் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார் . மஹாரஷ்ட்ரா அர்சு விலையை 9 முதல் 13 ரூபாய் நிர்ணயித்து இருந்தாலும் , எம்.எம்.ஓ.பி.எல் நிறுவனம் குறைந்தபட்சம் 10 ரூபாயும் அதிகபட்சமாக 40 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டும் என விண்ணப்பித்து இருந்தனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.