இன்று மீன் பிடிக்கச் சென்ற 73 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது . அவர்களின் மீன்பிடி படகுகளையும் கைப்பற்றினர் .
இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதினார் .
இந்த கடிதத்தில் , உடனடி நடவடிக்கையாக இந்திய அரசு இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் . தமிழக அரசும் இந்திய அரசும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் இந்த விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் . கடந்த மூன்று வருடங்களாக இலங்கை கடற்படையின் இந்த மோசமான நடவடிக்கை மீனவர் சமுதாயத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது . மேலும் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசின் இந்த செயல்கள் அவர்களின் மெத்தன போக்கைக் காட்டுகிறது . இதனால் தங்கள் தலைமையில் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் எழுதியுள்ளார் .
மேலும் மோடி அவர்களின் முயற்சியினால் ஜுன் 1 ஆம் தேதி சில மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததால் நன்றி கூறினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.