ஆட்சியை தற்போது பிடித்துவிட்டாலும் பிறகு வரும் தேர்தலுக்கு கட்சியை நன்கு வலுபடுத்த வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறது பிஜேபி. அதற்கு நல்ல தலைமை தேவை. கட்சியின் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் நாட்டின் உள்துறை அமைச்சர் என்கிற உயரிய பதவிக்கு சென்றுவிட்டார். அவர் தான் இந்தியாவின் தலைமை போலீஸ். அதனால் கட்சி பதவியை துறந்து ஆக வேண்டிய நிலைமை. அப்படியானால் அடுத்த தலைவர் யார் ?
பிஜேபி இல் பெரிய அளவில் வாரிசு அரசியலுக்கு இடம் அளிக்க மாட்டார்கள் என்றாலும் அவர்களின் பெற்றோர் ஆன ஆர்.எஸ்.எஸ் இன் முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள். அவர்கள் கை காட்டும் நபர் தான் தலைவர். இது அவர்கள் சட்டதிட்டத்தில் எழுதப்படாத விதி. வாஜ்பாய் அத்வானி காலத்தில் வேண்டுமானால் கட்சியில் கொஞ்சம் சுதந்திரம் இருந்து இருக்கலாம். புதிதாக ஒரு நபரை தேர்வு செய்வதே அவர்களது வழக்கம். அவரை அக்கட்சியின் தொண்டனே கூட அறிந்து இருக்க மாட்டான். இந்த முறை மூன்று பேர் போட்டியில் உள்ளனர். அவர்கள் மோடியின் வலது கரமான அமித் ஷா, ஜே.பி.நட்டா , ஓ.பி.மாத்தூர் .
மோடியின் செல்ல பிள்ளையாக இருந்த அமித் ஷா , உத்தர பிரதேசத்தில் பெற்ற வெற்றியின் மூலம் பிஜேபி யின் செல்ல பிள்ளை ஆகி உள்ளார். இந்த வெற்றிக்கு பிறகு கட்சியின் அசைக்க முடியாத வெற்றி தூணாக மாறி உள்ளார். தவறு செய்யும் ஆட்கள் இவரது கண்களில் இருந்து தப்பவே முடியாது என்கிறார்கள். அடுத்த நபர் ஓ.பி. மாத்தூர் , ஆர்.எஸ்.எஸ் பிரசாகராக இருந்தவர். 2002 இல் மத்திய பிரதேச மாநில பொறுப்புக்கு சென்றார். இவர் போனதில் இருந்து ஆட்சியை இழந்த காங்கிரஸ் இன்னும் எழுந்திருக்கவே இல்லை. மூன்றாவது நபர் ஜே.பி.நட்டா, தேர்தல் கால செயல்களை திறமையோடு செய்வதில் வல்லவர். கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் பெற்ற வெற்றிக்கு இவரது பங்கு முக்கியமானது ஆகும். தேசிய பொது செயலாளர் பொறுப்பில் இருந்து உள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.