கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஒரு காதலால் தமிழகமே பதற்றமாக இருந்தது. அதற்கு காரணம் தர்மபுரியில் நடந்த காதல் கதை. இளவரசன் - திவ்யா காதலால் தர்மபுரியே கதி கலங்கியது. அங்கு இருந்த ஜாதி வெறியால் அந்த காதல் தோற்றது. இப்போது மீண்டும் அதே தர்மபுரியில் ஒரு காதல் கதை தொடங்கி உள்ளது. இது ஒரு வேறுபட்ட கதை.
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒரு பெண் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாள் . அவளை காப்பாற்றி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் வந்து உள்ளது. இவர் ஒரு டிப்ளமோ மாணவி, இவளது வகுப்பு தோழனான ஒருவரை காதலித்து உள்ளார். இளம்வயது என்பதால் புத்தி கெட்டு தவறான வழியில் சென்று அவரிடம் கற்பை இழந்தார். இதனால் அவள் கருவுற்றால், உடனே அந்த இளைஞன் தனது வீட்டில் விரைவில் சம்மதம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவளது கருவை கலைத்து விட்டான்.
ஆனால் இப்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறான் . இருவரும் தனிமையில் இருந்த எடுத்த சில ஆபாசமான இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளான் . அது மட்டுமில்லாமல் தனது நண்பன் மூலமாகவும் மிரட்டி உள்ளான். இதனால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் விஷம் குடித்து உள்ளார். இப்போது அந்த இளைஞனிடம் விசாரணை நடத்த போலீஸ் முடிவு செய்து உள்ளது.
நண்பர்களே காதலிப்பதில் தவறு இல்லை, ஆனால் அதில் எல்லை மீறிவிட்டால் நமக்கு தொல்லை தான்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.