இந்திய ரிசர்வ் வங்கி , வருகிற நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு முறை நீங்கள் பணம் எடுக்கும் போது கட்டணமாக அதிகம் செலுத்த வேண்டியதிருக்கும் . என்ன மாற்றம் , என்ன விதிகள் என்பதைக் கீழ்க் காண்போம் :
- மற்ற வங்கி ஏ.டி.எம் பயன்படுத்தும் போது : இதற்கு முன்னால் நீங்கள் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம் பயன்படுத்தி இலவசமாக மாதத்திற்கு ஐந்து முறை பணம் எடுத்துக் கொள்ளலாம் . ஆனால் நவம்பர் மாதம் முதல் , சென்னை , மும்பை , கொல்கத்தா , பெங்களூரு , ஹைதராபாத் , நியு டில்லி ஆகிய இடங்களில் மூன்று முறை மட்டுமே இலவசமாக எடுக்க முடியும் . அதற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் . ஆனால் வங்கிகள் ஆசைப்பட்டால் இந்த 3 முறையை உயர்த்திக் கொள்ளலாம் .
- விதிவிலக்குகள் : ஆனால் இந்த புதிய விதிகள் சிறிய மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள் வைத்து இருப்பவர்களுக்கு பொருந்தாது .
- சொந்த வங்கி ஏ.டி.எம் பயன்படுத்தும் போது : இனிமேல் சொந்த வங்கி ஏ.டி.எம் பயன்படுத்தி பணம் எடுக்கும் போதும் ஐந்து முறைகளுக்கு மேல் கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு . இது அனைத்து இடங்களில் உள்ள ஏ.டி.எம் களுக்கும் பொருந்தும் .
- எவ்வளவு வசூலிக்கப்படும் : எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதை வங்கிகள் தான் தீர்மாணிக்க வேண்டும் . ரிசர்வ் வங்கி அதிகபட்சமாக 20 ரூபாய் வரை வசூலிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது .
- எதுக்கு இந்த புதிய விதி : ஏ.டி.எம் களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் , அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்புக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.