ஆயிரம் தியேட்டரில் ரிலீஸ், நூறு கோடி பிசினஸ் என்றெல்லாம் ஒத்தை பட்டன் சட்டை போட்டுக்கொண்டு ஆட்டம் ஆடிய சமந்தா, நான்கு நாட்களாக எந்த சேனலை வைத்தாலும் அஞ்சான் அஞ்சான் என்று ப்ரோமோ கொடுத்து கிளப்பிய பரபரப்பை அஞ்சான் "சூர்யாவின் சுறா", அஞ்சான் படம் பார்த்துவிட்டு வர்றவன் தான் டா நிஜமா அஞ்சான் என்று யாருக்கும் பயப்படாமல் சமூகவலைதளங்களில் வெளியான விமர்சனங்கள் படத்தை பப்படமாக்கின.
அதே சமயம் எந்த பெரிய நட்சத்திரங்களும் இல்லாமல், புதிய இயக்குனர், புதிய ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர் என களம் இறங்கியது சினேகாவின் காதலர்கள். அஞ்சான் அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்தாலும் கிடைத்த தியேட்டர்களின் வெளியானது சினேகாவின் காதலர்கள், ஒரே நாளில் சமூக ஊடகங்கள், பத்திரிக்கை தரப்பில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்க தற்போது பிக்கப் ஆகியுள்ளது சினேகாவின் காதலர்கள்
நேற்று 180 பேர் பார்த்த சந்திரன் தியேட்டரில் இன்று ஹவுஸ்புல்லாக 600 பேர்.சென்னையின் எல்லா தியேட்டர்களும் ஹவுஸ் ஃபுல் மதுரையிலும் இப்படத்திற்கான தியேட்டர்கள் அதிகரிப்பு..
திங்கள் கிழமையிலிருந்து உதயம் காம்ப்ளெக்ஸ் சூரியன் திரை அரங்கில் தற்போது ஒரு காட்சி மட்டுமே ஓடும் சினேகாவின் காதலர்கள் படம் 3 காட்சிகளாக உயர்த்த இருக்கிறார்கள்,சினிமாவில் எதுவும் நடக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.