Saturday, 18 May 2013
பிரபாகரன் படத்துக்கு தடை, கடலூரில் நாம் தமிழர் கட்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தடை, SFFE மெரினா கூட்டத்துக்கு தடை, ஒரிஜினல் முகம் காட்டும் ஈழத்தாய் ஜெயலலிதா.
பிரபாகரன் படத்துக்கு தடை, கடலூரில் நாம் தமிழர் கட்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தடை, SFFE மெரினா கூட்டத்துக்கு தடை, ஒரிஜினல் முகம் காட்டும் ஈழத்தாய் ஜெயலலிதா.
ஈழத்தமிழர்களுக்கும் புலிகளுக்கும் அதிக ஆதரவளித்த எம்ஜிஆர் காலத்து அதிமுக கட்சியும் ஆட்சியும் ஜெயலலிதா கைக்கு வந்த பின் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்தனர். 2009ல் தேர்தலின் போது மட்டும் நாங்கள் வெற்றி பெற்றால் ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்று தருவோம் என்று கூறியும் தோல்வி அடைந்தனர். அதன் பின் அமைதியாக இருந்த ஜெயலலிதாவை கருணாநிதியின் தொடர்நாடகங்களாலும் ஈழம் தொடர்பான போராட்டங்களை நேரடியாகவும், நயவஞ்சகமாகவும் நசுக்கிய கருணாநிதியினால் வெறுப்புற்றிருந்த தமிழ் ஆர்வலர் இயக்கங்கள் ஆதரித்தன.
சட்டசபையில் இலங்கைக்கு எதிரான தீர்மாணம், இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னயில் ஆட மறுப்பு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கிளம்பி மாணவர் போராட்டங்களை அதிரடியாக ஒடுக்காமல் கையாண்டது என ஜெயலலிதா அரசு சற்று ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாக ஒரு கருத்தை உருவாக்கிய நேரத்தில் இன்றைய முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு கூட்டங்களை நடத்துபவர்களுக்கு காவல்துறையிடமிருந்து ரத்து செய்ய சொல்லு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. கடலூரில் இன்று நாம் தமிழர் கட்சி நடத்துவதாக இருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. இன்றைய கூட்டங்களில் பிரபாகரன் மற்றும் புலிகள் தொடர்பான எந்த படங்களையும் பேனரையும் அனுமதிக்காமல் நீக்க சொல்லியுள்ளது காவல்துறை.
இது ஜெயலலிதா அரசின் புதிய நிலைப்பாட்டை அல்ல பழைய நிலைப்பாட்டையே மீண்டும் எடுத்துள்ளதை காட்டுகிறது.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.