நேற்று மக்களவையில் உணவு பாதுக்காப்பு மசோதா குறித்தான ஓட்டெடுப்பு நடந்து மசோதா நிறைவேறியதும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தமக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார், உடனடியாக எய்ம்ஸ் மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார்
இரவு பதினோரு மணியளவில் சோனியாகாந்தி அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், அவரை நேரில் சென்று பிரதமர் மன்மோகன்சிங், மக்களவை தலைவர் மீராகுமார் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் நலம் விசாரித்தனர், இன்று காலை அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக செய்தி வெளியாகியுள்ளது
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் சோனியாகாந்தி தமது உடல்நலம் குறித்தான காரணத்தால் அப்பதவியை ராகுல்காந்திக்கு கொடுப்பார் என எதிர்பார்ப்பதாக கூறினார், ராகுல்காந்தி ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் துணைதலைவராக இருப்பது குறிப்பிடதக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.