தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் மது மொத்த விற்பனை கூடமாக டாஸ்மாக்(TASMAC) தொடங்கப்பட்டது. அது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என அப்போது அவர் அறிவித்தார்.
பின் 2001 ஆம் ஆண்டு மதுக்கடைகள் ஏலம் விட்டபோது போதிய அளவில் யாரும் ஏலம் எடுக்கவில்லை, மதுவிலக்கு சட்டத்தில் சிறு திருத்தங்கள் செய்து மீண்டும் 2002 ஆம் ஆண்டு ஏலம் விட்டப்போது அப்போதைய சாராய சக்கரவர்த்திகள் அரசின் செயலை முறியடிக்க பல இடங்களில் ஏலத்தை புறக்கணித்தனர், இதனால் 2003 ஆம் ஆண்டு மொத்த வியாரத்தோடு மட்டுமல்லாமல் சில்லறை வணிகத்தையும் தானே ஏற்று நடத்தும் என தமிழக அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை கூடம் உருவாக்கியது.
ஆரம்பத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி இதை எதிர்த்தாலும் அதன் வருமானம் கண்டு 2006 ஆம் ஆண்டு ஆட்சி பெறுப்பேற்ற கருணாநிதி மது சில்லறை விற்பனையை தொடர்ந்தார். அந்த சமயத்தில் தான் தமிழகத்தில் பரவலாக இலவசங்கள் அறிவிக்கபட்டது. 2003 ஆம் ஆண்டு தொடங்கபட்ட டாஸ்மாக் வருடா வருடம் அசுர வளர்ச்சி கண்டுடது, தொடங்கபட்ட ஆண்டு 2828 கோடி வருமானம் ஈட்டிய டாஸ்மாக், 2012 ஆம் ஆண்டு 18081 கோடி லாபம் ஈட்டியது.
அரசுக்கு வருமானம் வந்தாலும் அவை எல்லாம் அன்றாடம் நூறு, இரநூறுக்கு வேலை செய்யும் கூலித்தொழிலாளிகள் பணம் என்பதை மறக்கக்கூடாது. படிக்கும் இளைஞர்களில் இருந்து வீட்டில் இருக்கும் பாத்திரம் பண்டங்களை விற்றாவது குடிக்க வேண்டும் என்ற குடிநோய்க்கு லட்ச கணக்கில் குடிநோயாளிகள் உருவாகினர். இன்று எந்த அரசு மருத்துவமனைக்கு சென்றாலும் இதய நோயாளிக்கு சமமாக குடிநோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பூரண மது விலக்கு வேண்டும் என பா.ம.க கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க கட்சி தலைவர் வை.கோ ஆகியோர் தொடர்ந்து வழியுறுத்தி வந்து கொண்டிருந்தனர். 2011 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா பூரண மதுவிலக்கு குறித்து ஒருமுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டாஸ்மாக் நிறுவன வருமானம் தடைபட்டால் அதை ஈடுகட்ட மாற்று வழி என்ன என்பதே அப்போதைய முக்கிய விவாதமாக இருந்தது.
பல சமூக ஆர்வளர்களின் தொடர் வழியுறுத்தலாலும், தொடர்ந்து தமிழகம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தில் பின்னடைந்து வருவது குறித்தும் முதல்வருக்கு பல மனுக்கள் சென்றுள்ளன. இது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் மது விலக்கு பூரணமாக அமுலுக்கு வர வேண்டும். மது இல்லாத தமிழகத்திற்கான மாற்று திட்டத்தினை தயாரியுங்கள் என உத்தரவிட்டுள்ளார் என செய்தி கிடைத்துள்ளது.
இது குறித்த இறுதி அறிக்கை விரைவில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதுவிலக்கு அமுலுக்கு வந்தால் நிச்சயம் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சிகுள்ளாவர்கள் என்றும். தனிமனித பொருளாதாரம் உயர்வதால் தமிழகத்தில் தொழில் மற்றும் உற்பத்தி உயரும் எனவும் பொருளாதர வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செய்தியைப் படிக்கும்போதே மனது பரிபூரணமடைகிறது.அப்படி ஒரு நல்ல முடிவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எடுத்து , நடைமுறைப்படுத்தினால் கோடான கோடி வணக்கங்கள்.
ReplyDeleteOnly j can do this. .
ReplyDeleteWe can expect from her. .
Instead of tasmac we are ready to bare anything. .
very good to HON'ble J JAYALALITHA,FOR THIS ACTION LET SHE CLOSE THE TASMAC COMMON PUBLIC AND WOMENS WILL CAST HER FULLEST SUPPORT.
ReplyDelete