BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 18 August 2013

மெட்ராஸ்கஃபே ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் பச்சையாக கொச்சைப்படுத்தும் திரைப்படம்

மெட்ராஸ்கஃபே ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் பச்சையாக கொச்சைப்படுத்தும் திரைப்படம். ராஜீவ்காந்தி ஹீரோவாம், பிரபாகரன் வில்லனாம்.

ஜான் ஆபிரகாம் நடித்த மெட்ராஸ்கஃபே திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று தமிழ் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரையிட்டு காட்டப்பட்டது, படத்தை பார்த்த அத்தனை பேருக்கும் ரத்தம் கொதித்துள்ளது. அப்பட்டமாக ஈழத்தமிழர்களை கொச்சை படுத்தியும் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்தும் உள்ள படத்தில் வைகோ, காசி ஆனந்தன் போன்றவர்கள் நேரடியாக கொச்சை படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் படம் திரையிடபட்டால் யாருக்கும் நல்லதல்ல.. ஜான் ஆபிரகாமுக்கும் நல்லதல்ல என்று சீமான் கூறியுள்ளார், தமிழ்நாடு திரையரங்க சங்க தலைவர் அபிராமி ராமநாதன் திரையிட முடியாது என்று கூறி உள்ளார்


இன்று படம் பார்த்த சிலரின் விமர்சனங்கள்

இரா. இளமுருகன்
மெட்ராஸ் கபே படத்தில் ஈழ தமிழ் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தாரிக்க பட்டு இருக்கிறார்கள். ஒரு காட்சியில் வைகோ அய்யா அவர்கள் மீது ஆவதூறுயை வாரி இறைத்து இருக்கிறார்கல்

இந்த படத்தை எல்லாம் தமிழக அரசு தடை பண்ணாது ஆனால் தமிழன் நடித்த தமிழ் படத்தை மட்டும் வெறி கொண்டு தடை பண்ணும்


Agazhvaan GGanesh

சற்று முன்பு Madras cafe படம் பார்த்து முடித்தோம், நிறை எழுத இருக்கிறது

1.ராஜீவ் காந்தி கதாநாயகன், பிரபாகரன் வில்லன்
2.காங்கிரசின் தேர்தல் பிரச்சாரம்
3.காசி ஆனந்தனும் வைகோவும் நேரடியாக கொச்சைபடுத்தபட்டிருக்கிரார்கள்

மெட்ராஸ் கஃபே படத்தில் நாயகனின் அப்பாவி மனைவியை புலிகள் வீடு புகுந்து சுட்டு கொல்வது போல உள்ளது

# எந்த அளவிற்கு நுணுக்கமான உளவியல் மாற்றத்தை செய்ய நினைக்கிறார்கள் என பாருங்கள். புலிகள் இதுவரை குழந்தைகள் மீதோ பெண்கள் மீதோ ஆயுதத்தை பயன்படுத்தியது கிடையாது. அதுவும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது கிடையாது

Joe Britto

இரத்தம் கொதிக்கிறது...,
MADRAS CAFE படத்தைப் பார்த்தேன்!

நம் தலைவர் பிரபாகரனின்
தவறான முடிவுகளால்
சிங்கள மக்களும்,தமிழர்களும் செத்தனர்...

கடைசி வரை அமைதிக்காக தவம்
கிடந்த ராஜீவ் காந்தியை பிரபாகரன்
கொன்றார்...

படம் முழுக்க
தமிழ் இனத் துரோகம்!!!

# ஆகத்து 23 ஆம் தேதி
எங்கெல்லாம் முடியுமோ..
அங்கெல்லாம் படத்தை வெளியிடு!

நாங்களும் வெளியிடுறோம்,
தெருவுக்கு தெரு...
மேடை போடுறோம்!
ராஜிவ் காந்தி கொலைக்கு
பின்னாடி உள்ள ..
காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்?
சாமியார்கள் யார்?யார்?
அதிகாரிகள் யார்?யார்?
மாநில ஆளுநர்கள் யார்?யார்?
உலக நாடுகள் யார்?யார்?

மானமுள்ள மாணவத் தலைமுறைத் தமிழனே வீதிக்கு வா!
தமிழன் என்றால் யார் என்று காட்டுவோம்...


1 comment :

  1. ஒரு சமுதாயத்தையோ இனத்தையோ மதத்தையோ உண்மைக்கு மாறாக தவறாக சித்தரித்து படம் எடுப்பவர்களைக் கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...

    ஆனால் இப்பொழுது தலைவாவிற்கும் மெட்ராஸ் கஃபே போன்ற படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர்கள் ஏன் ரெட்டை நிலையை கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

    இதே மாதிரிதான் உண்மைக்கு மாறாக தவறாக சித்தரித்து //எந்த அளவிற்கு நுணுக்கமான உளவியல் மாற்றத்தை செய்ய நினைக்கிறார்கள் என பாருங்கள்.// விஸ்வரூபத்திற்கு முஸ்லீம்களும் சொன்னார்கள்!

    அப்பொழுதெல்லாம் கருத்துச் சுதந்திரம்னும் சினிமாவ சினிமாவாக பார்க்க வேண்டும்னும் ஒட்டுமொத்தமா கூப்பாடு போட்டாங்களே?

    இப்ப மட்டும் கருத்து சுதந்திரம் சினிமாவ சினிமாவாக பார்க்கிறது எல்லாம் எங்க போச்சு?

    உங்களுக்கு வந்தா இரத்தம் இஸ்லாமியனுக்கு வந்தா தக்காளி சட்னியா?

    நல்லா இருக்குதுயா உங்க நியாயம்...

    (குறிப்பு மெட்ராஸ் கஃபேவிற்கு நாம் ஆதரவாக பேசவில்லை)

    ReplyDelete

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media