இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் தமிழின் முன்னணி கலைஞர்கள் பலரும் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் நிலையில் பிலிம் சேம்பரை நம்பி நான் இந்த விழாவுக்கு போயிருக்கவே கூடாது என்று திடீரென்று தனது மனக்குமுறல்களை வெளியிட்டிருக்கிறாராம் ரஜினி.
சென்னையில் 4 நாட்கள் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா கிளப்பியுள்ள சர்ச்சைகளும், புறக்கண்ணிப்புகளும், அவமானப்படுத்தல்களும் தமிழக முதல்வரை ஒரு சமாதான அறிக்கை விடும் அளவுக்கு கொண்டு போய் விடும் என்றே தெரிகிறது.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களை அழைத்து அவமானப்படுத்தியதும், கருணாநிதி, ரஹ்மான் போன்றவர்களை அழைக்காமல் அவமதித்ததும் தமிழ்சினிமா உலகம் மற்றும் தமிழ்சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
ரஜினி, கமல், இளையராஜா ஆகிய மூத்த திரைக்கலைஞர்களை விழாவின் கடைசி வரிசையில் உட்கார வைத்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி பெரும் வருத்தமும் கண்டனமும் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட அவமரியாதை குறித்து, தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் பேசிய ரஜினி ‘ ஃபிலிம் சேம்பர் அழைத்ததே என்பதற்காகத்தான் இந்த விழாவுக்கே நான் போயிருந்தேன். அது தவறாகி விட்டது. என்னை ரொம்ப ரொம்ப அவமானப்படுத்தி விட்டார்கள். ஒவ்வொரு கலைஞனும் இந்த விழாவில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறான்’. விழாவிற்கு நான் போயிருக்கவே கூடாது’ என்று தனது மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்து விட்டாராம்.
ரஜினியாவது துணிந்து சொல்லி விட்டார்(அட்லீஸ்ட் நண்பர்களிடம்). ஆனால் சரத்குமார் உள்ளிட்ட மற்ற கலைஞர்கள் விழாவைப் பற்றிப் பேச்சை எடுத்தாலே கப்-சிப் ஆகி விடுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.