சீனாவின் சக்திவாய்ந்த அரசியல்வாதிக்கு ஊழல் குற்றசாட்டில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவின் வாரிசு அரசியல், ஊழல் மற்றும் பழிவாங்கும் போக்கு ஒரு பார்வை.
போ ஸிலாய்(Bo Xilai) சீனாவின் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளுள் ஒருவராக இருந்தார், இவர் டாலியான் நகர மேயராகவும் லியானிங் மாகாண கவர்னராகவும் இருந்தவர், அவர் பதவியி இருந்த காலங்களில் நகரத்தையும் மாகாணத்தையும் நவீனமயமாக்கினார், சிறந்த நிர்வாகியாகவும் இருந்ததால் சீன கம்யூனிஸ்ட் கட்சியினுள்ளும் சீனாவினுள்ளும் பெரும் புகழ் பெற்றார், வேகமாக வளர்ந்து வந்த அவரது புகழ் கட்சியினுள் அவரக்கு எதிர்களை உருவாக்கியது. சீனாவின் வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் சீனாவின் வர்த்தகம் உலகெங்கும் வேகமாக வளரத்தொடங்கியது, கம்யூனிஸ்ட் கட்சியின் மிக அதிகாரம் படைத்த மத்திய பொலிட்பீரோ உறுப்பினராகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் சாங்குயிங் பிரிவின் செயலாளராகவும் கடைசியாக பதவியில் இருந்தார்.
இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவி அவது பிசினஸ் பார்ட்னரான பிரிட்டனை சேர்ந்த பிசினஸ்மேனை கொன்றதாக கைது செய்யப்பட்டார், அதை மறைக்க உதவி செய்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒத்துக்கொள்ள போ ஸிலாய்க்கு பிரச்சினை எழுந்தது, அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்ட போ ஸிலாய் மீது கொலைக்கு உதவிசெய்தல், ஊழல் செய்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தல் என வழக்கு தொடரப்பட்டது, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இது பழிவாங்கும் நடவடிக்கை என சிலர் குரல் எழுப்பினார்கள் ஆனால் அவைகள் எளிதாக அடக்கப்பட்டன. தற்போது நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்துள்ளது.
சீனாவிலும் வாரிசு அரசியல்
சீனா கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஆட்சியிலும் வாரிசு அரசியல் ஓங்கியுள்ளது, சீனப்புரட்சி காலத்திலும் அதன் பின் ஆட்சியிலும் கட்சியிலும் பங்குவகித்த 8 பெரும் தலைவர்களின் வாரிசுகளே தற்போதும் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர், போ ஸிலாய்யும் இந்த எட்டு தலைவர்களில் ஒருவரான போ யிபோ (Bo Yibo) வின் மகன் ஆவார். இது சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை
சீன ஆட்சியில் தவறிழைக்கும் ஆட்சியாளர்களுக்கு கடும் தண்டனை அளிப்பது போல தோன்றினாலும் இது அனைவருக்கும் பொறுந்தாது, சீன மேல்மட்ட ஆட்சியாளர்கள் அவர்கள் வாரிசிகளின் அட்டகாசங்கள் அதிகம், அதே போன்று பணம், செல்வாக்கு அதிகாரம் எல்லாம் மேல்மட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளிடமே உள்ளன. சமீபத்தில் சீன உயர் ராணுவ அதிகாரியின் 17 வயது பையன் கூட்டு கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சீனாவின் பெரு நகரங்களில் இந்த வாரிசுகள் ஃபெராரி போன்ற ரேஸ் கார்களில் எந்த விதிகளையும் மதிக்காமல் அதிவேகமாக சென்று விபத்துகளை உருவாக்கியுள்ளனர், சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு ஃபெராரி கார் விபத்திற்கு காரணம் ஒரு வாரிசு கார் ஓட்டிக்கொண்டே காரினுள் பலான வேலைகளில் ஈடுபட்டதே.இது சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை
சீனாவின் அதிகாரமட்டத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே பிரச்சினைகள் புகைந்து கொண்டே உள்ளன, மனித உரிமை மீறல், தனி மனித சுதந்திரம் இன்மை, கருத்து சுதந்திரம் இன்மை, கடும் அச்சுறுத்தல்கள், நடவடிக்கைகள், கருத்து சுதந்திரத்தை நசுக்குவது, இண்டெர் நெட் கட்டுப்பாடுகள் என்று தனது வண்டியை ஓட்டிக்கொண்டுள்ளது சீன அதிகாரமட்டம்.
நமது நாட்டின் கம்யூனிஸ் கட்சிகளோ சீனாவை புகழ்ந்து கொண்டுள்ளன
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.