BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 22 September 2013

அன்று அஜீத்திற்கு அவமரியாதை, இன்று விஜய்க்கு அவமரியாதை - ஆளுபவர்களிடமிருந்து விடுதலை ஆகுமா சினிமா?


அன்று அஜீத்திற்கு அவமரியாதை, இன்று விஜய்க்கு அவமரியாதை - ஆளுபவர்களிடமிருந்து விடுதலை ஆகுமா சினிமா?



திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வரின் பேரன்கள் ஆளுக்கொரு சினிமா கம்பெனி ஆரம்பித்து மொத்த தமிழ் சினிமாவையும் தியேட்டர்களையும் தங்கள் கண்ட்ரோலில் வைத்துக்கொண்டு இருந்தார்கள், அது போதாதென்று பாசத்தலைவனுக்கொரு பாராட்டுவிழா என்ற பெயரில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி பாராட்டு விழா எடுக்கிறோம் என்று பாராட்டுவிழா எடுத்து அதில் ரஜினி,கமல் உட்பட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று "அன்பு" அழைப்பு வேறு.

இதை ஒரு முறை நடந்த பாராட்டுவிழாவில் கருணாநிதியிடம் "அய்யா மெரட்டுறாங்க அய்யா" என்று நடு மேடையில் அஜீத் போட்டு உடைக்க அதற்கு ரஜினி எழுந்து நின்று கைதட்ட மூட் அவுட் ஆன கருணாநிதி மேடையிலேயே விளாசிவிட்டு சென்று விட்டார், அதன் பின் அஜீத் கோபாலபுரம் வாசலில் காத்து கிடந்து நேரில் சென்று மன்னிப்பு கேட்டு பின் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் மனைவியுடன் போய் கடைசி சேரில் உட்கார்ந்து கிடந்தது பழைய கதை.

ஆட்சிகள் மாறின, ஆனால் காட்சிகள் மாறவில்லை, விஜயகாந்தை எதிர்க்கிறேன் என அதிமுக கூட்டணியை எதிர்த்து வடிவேலு தேர்தல் நேரத்தில் ஓவராக சலம்ப முடிவுகள் வேறு விதமாக வந்தது, அன்றிலிருந்து இன்றுவரை படம் இல்லாமல் இருக்கிறார், இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று சொன்னாலும் வேறு பல காரணங்களால் விஸ்வரூபம் முடக்கப்பட்டது, விஜய்யின் தலைவாவும் வெளிப்படையாக சொல்லாமல் ஏதேதோ காரணங்கள் சொல்லி தடுக்கப்பட்டு பின் வெளியானது.

விஜய் கைகட்டி மன்னிப்பு கேட்கும் விதமாக வீடியோ வெளியிட்டார், இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டு விழா கூட்டத்தில் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டுள்ள விஜய்யின் படக்குறிப்புகள் கிளிப்பிங்குகள் எதுவும்  வெளியிடப்படவில்லை, ஆனால் வேறு பல படங்களின் கிளிப்பிங்குகள் வெளியாகின, அதே போன்று விஜய்க்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை, விஜய் அமைதியாக கடைசி வரிசையில் சென்று உட்கார்ந்தார், ஆனால் விஜய்யை வளைத்து வளைத்து படம் எடுத்ததில் இன்று காலை வெளியான பல பத்திரிக்கைகளிலும் விஐபி வரிசையில் கடைசி வரிசையில் உட்கார்ந்த விஜய் படம் பெருமளவி வெளியானது.

தமிழ்நாடு சினிமாவிலிருந்தே தனது பல முதல்வர்களை தேர்ந்தெடுத்திருப்பதால் ஆளும் வர்கத்துக்கு சினிமாவை கடுப்படுத்த வேண்டும் என்ற ஆவல் உள்ளது தெரிகிறது, அது எந்த கட்சி ஆண்டாலும் என்ற நிலையில் உள்ளது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.

# லாஸ்ட் ரோவே ஆனாலும் விஜய் உட்கார்ந்தா அது தான் ஃபர்ஸ்ட் ரோ


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media