சென்னை மேத்தா நகர், நெல்சன் மாணிக்கம் ரோடு எதிரில் உள்ள தனியார்
இடத்தில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலை அவரது குடும்பத்தாரால் வைக்கப்பட்டுள்ளது, தெருக்களின் சந்திப்பில் சிலை இருந்தாலும் சிலை இருக்கும் இடம் சோபன்பாபு குடும்பத்தாரின் சொந்த இடம், ஆனால் சிலையின் பீடத்தின் பகுதி பொதுமக்களின் நடை பாதையினை ஆக்கிரமித்து நீட்டிக்கொண்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
சோபன்பாபுவின் சிலையின் பீடம் பொது இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்படது குறித்து மே15, 2012 அன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் லிங்க்
http://newindianexpress.com/cities/chennai/article66234.ece
நடிகர் சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை நீக்கலாம் என்று முடிவெடுத்தது போல பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சோபன்பாபு சிலையின் பீடத்தை அகற்றுமா அரசு?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.