BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 11 November 2013

காமன்வெல்த்தில் இந்திய அரசின் சார்பில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம்

இனப்படுகொலை நாடானா இலங்கை நடத்தும் காமன்வெல்த்தில் இந்திய அரசின் சார்பில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.

மாணவர்கள், அதிமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், தமிழ்புலிகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய இயக்கங்கள் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர்




இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.  காமன்வெல்த் மாநாட்டை அதன் உறுப்பு நாடுகள் புறக்கணிக்க வேண்டும்.  காமன்வெல்த் மாநாட்டிற்கு ராஜபக்சே தலைமை தாங்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் பல்கலைக் கழகம் முன் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் கப்சிப் கருவாட்டு வால், புதுச்சேரியில் சவுண்டுபார்ட்டி அதிமுக‌

இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்.  இந்தியாவிலிருந்து ஒருவர் கூட கலந்துக் கொள்ள கூடாது. என்று கோரி புதுச்சேரியில் அ.தி.மு.க.வினர் ரயில் மறியல் செய்தனர். தமிழ்நாட்டில் மட்டும் அதிமுகவினர் எந்த போராட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இனப்படுகொலை நாடான இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த எதிர்ப்பு மதுரையில் தமிழ் புலிகள் ரயில் மறியல் செய்தனர்.


காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை தூக்கியெறியப்பட வேண்டும் என மதுரையில் செல்போன் கோபுர உச்சியில் ஏறி விடுதலை சிறுத்தைகள் முழக்கம்.


காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.  திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் திருச்செந்தூர்-திருநெல்வேலி பயணிகள் ரயிலை மறிக்க முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கைது.


இலங்கையில் நடக்கும், காமன்வெல்த் மாநாட்டினை புறக்கணி... தமிழக அரசே…! பரமக்குடி படுகொலை சம்பவம் குறித்த சம்பத் கமிசன் அறிக்கையை திரும்ப பெறு.... என்று கோஷமிட்டு  விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம். சம்பத் கமிசன் அறிக்கையை தீ வைத்து எரிப்பு.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media