தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள அத்தூரனஅள்ளி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் வருவாய்த் துறை சார்பில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 44 தலித்களுக்கு பட்டா வழங்கப்பட்டது, இதை
எதிர்த்து நிலத்தின் உரிமையாளரான வெங்கடசாமி வழக்கு தொடர்ந்தார், 1994லிருந்து நடந்து வந்த வழக்கில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, நில உரிமையாளரிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, தலித் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த 44 பட்டாக்களையும் வருவாய்த் துறையினர் ரத்து செய்தனர். மீண்டும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி, பிரச்னைக்குரிய அதே இடத்தில் கடந்த மாதம் பல குடிசைகளை தலித் மக்கள் அமைத்தனர். இந்தக் குடிசைகள் கடந்த சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.
தர்மபுரியில் ஏற்கனவே தலித்-வன்னியர்கள் மோதல் தீவிரமாக உள்ளதால் இது சாதிக்கலவரமாக வெடித்துவிடுமோ என்று அச்சம் நிலவியது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது அரசிடம் இழப்பீடு பெறும் நோக்கில் ஓலைக் குடிசைகளை அமைத்தவர்களே அவற்றுக்கு தீவைத்துக் கொண்டது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, குடிசைகளுக்கு தீவைத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலர் ராஜகோபால், அத்தூரனஅள்ளியைச் சேர்ந்த முருகன் (37), நாகராஜ் (30), கோவிந்தராஜ் (35), மாதுமணி (36), பெருமாள் (27), பழனி (55) முத்துசாமி (52) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
# இது என்னாங்கய்யா புது டெக்னிக்கா இருக்கு?

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.