BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 4 December 2013

மாணவர்களின் போராட்ட உணர்வை தூண்டுகிறார் என்று மதுரை காமராசர் பல்கலை கழக பேராசியர் சஸ்பெண்ட்

மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் பணிஇடை நீக்கம்

மாணவர்களின் போராட்ட உணர்வை தூண்டுகிறார் எனும் காரணத்தினாலும் HE HAS A LINK WITH TAMIL CHAUVINIST PEOPLE அதாவது தமிழ் உணர்வார்கள் உடன் தொடர்பு என காரணத்தினால் மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் பேரா.ராமச்சந்திரன் அவர்கள்.

மாணவர் போராட்டத்தை ஆதரித்து சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.ஆனால் போராடும் மாணவர்களின் மதிப்பெண்களை குறைப்பது,அவர்களின் குடும்பத்தை உளவுத்துறை மூலம் மிரட்டுவது,இதையும் மீறி அறப்போர் நடத்தும் மாணவர்களை காவல்துறையை ஏவி விட்டு தாக்குவது எனத் தொடர்ந்து வரும் ஒடுக்குமுறைகளின் உச்சமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இந்த நடவடிக்கை நடந்து உள்ளது.அதிகாரம் கையில் இருக்கிறது என ஆட்டம் போட்டவர்களின் அதோ கதியை ஆட்சியாளர்கள் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

ஒடுக்குமுறைகளால்,மாணவர் போராட்டம் ஓங்கிய வரலாறே நிலை பெற்று இருக்கிறது.தற்போதும் தளராத மனதோடும் தமிழின உணர்வோடும் உள்ள விரிவுரையாளர்.ராமச்சந்திரன் அவர்களை கண்டு வியக்கிறோம்.மாணவர்களும்,இளைஞர்களும் என்றும் பக்கபலமாக இருப்போம்.அதே நேரத்தில் முகநூல் நண்பர்கள் இவரைப் போல அநீதி உண்டாக்கப்பட்ட பலருக்கு தோள் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

-தமிழக மாணவர்கள்.

via @Joe Britto


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media