BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 15 July 2013

நாய்க் குட்டி விமர்சனம் மோடி மீது கேஸ், காமராஜர், உத்ரகாண்ட் பேரழிவு காலை செய்திகள்

நாய்க் குட்டி விமர்சனம்: மோடியை கைது செய்ய வேண்டும் – ஐதராபாத் போலீஸ் நிலையத்தில் வக்கீல் புகார்

ஐதராபாத் சந்தோஷ் நகர் போலீஸ் நிலையத்தில் வக்கீல் குலாம் ரப்பானி அளித்துள்ள புகார் மனுவில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கத்தில் நாய்க் குட்டி என்று கூறி இழிவுப்படுத்தும் விதமாக மோடி பேசியுள்ளார்.

இந்த பேச்சு இந்து – முஸ்லிம் மக்களுக்கிடையே பகைமையை உண்டாக்கும் விதமாக அமைந்துள்ளதால் மோடியை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
------------

உத்ரகாண்ட் வெள்ளப்பேரழிவு காணமல் போன 6 ஆயிரம் பேரை மரணமடைந்தவர்களாக அறிவிக்க முடிவு

உத்ரகாண்ட் வெள்ளப்பேரழிவில் பல ஆயிரம் பேர் இறந்தனர், இந்நிலையில் காணமல் போன 6 ஆயிரம் பேரை மரணமடைந்தவர்களாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது, உ.பியை சேர்ந்தவர்கள் 2000 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் 1000க்கும் மேல், மீதி பேர் 16 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

-------------------

"அரசியல் வேறுபாடுகளை கடந்து போற்றத்தக்க தலைவர் காமராஜர்" - திமுக தலைவர் கருணாநிதி

பெருந்தலைவர் காமராஜரின் 111வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த செய்தியில் "அரசியல் வேறுபாடுகளை கடந்து போற்றத்தக்க தலைவர் காமராஜர்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி புகழ்ந்துள்ளார், மேலும் சென்னை விமான நிலையத்துக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டதும் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக சட்டம் இயற்றியதும் தி.மு.க ஆட்சியில்தான் என்றும் மறக்காமல் சைடில் பிட் ஓட்டினார் திமுக தலைவர் கருணாநிதி.

-------------

மொரீஷியஸ் நாட்டிற்கு, கடற்படை போர் விமான இன்ஜின் மற்றும் தளவாடப் பொருட்களை, இந்திய அரசு பரிசாக வழங்கியது. 

# ஏய் பஞ்சாயத்து, எம்பூட்டு புள்ளைக்கு 5 ரூபாய் பலூன் வாங்கி தர வக்கில்லை, ஆட்டக்காரிக்கு 200 ரூபாயா?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media