ராமநாதபுர மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனி விமானம் ஒன்றில் மதுரை வரை சென்று விட்டு, பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் ஒன்றில் ஏறி பசும்பொன் கிராமத்திற்கு சென்றார்.
பதிமூன்று கிலோ தங்கத்தால் செய்யப் பட்டுள்ள கவசத்தை, தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாளிடம் ஜெய லலிதா வழங்கினார். பின்னர், நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து, தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை அ.தி.மு.க. சார்பில் அணிவித்ததில் பெருமகிழ்ச்சி தான் அடைந்ததாக கூறினார்.
"ஆன்மிகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் அல்லாத ஆட்சி என்பது போன்ற தேவருடைய கொள்கைகளை வென்றெடுக்க வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்து விட்டது. அந்த லட்சியத்தை அடைய நீங்கள் எங்களுக்கு என்றென்றும் துணை நிற்க வேண்டும்.", என்று ஆயிரகணக்கில் திரண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் தேவர் சமுதாய மக்களை பார்த்து முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.