பெண்ணுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாரூர் அருகே உள்ள நீடாமங்கலத்தில் நடந்த திருமணத்தில் மணமகள் வசந்தி என்பவர், மணமகன் சதீஷ் என்பவர்க்கு தாலி கட்டினார்.
மணமகன் கழுத்தில் மணமகள் தாலி கட்டியதால் மண்டபத்தில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ஆணுக்கு, பெண் சமம் என்பதை வலியுறுத்துவதற்காக மணமகன் கழுத்தில் மணமகள் தாலி கட்டியதாக மணமக்களின் பெற்றோர் தெரிவித்தனர். இந்த புதுமை திருமண நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நேதாஜி, திருவாரூர் மாவட்ட செயலாளர் வீரசேனன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.