பாளையங்கோட்டை அருகே சனிக்கிழமையன்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை போராடி அணைத்தனர். அப்போது காருக்குள் 3 பேரின் உடல் கருகிய நிலையில் இருப்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையின் போது உடல் கருகி இறந்தவர்கள் பிரபல கட்டட காண்ட்ராக்டர் பரிபூரணம், அவரது மனைவி மல்லிகா மற்றும் மகள் சுமதி என்பது தெரியவந்தது. தொழில் ரீதியாக பரிபூரணம் என்கிற கண்ணன், தனது நண்பர்களுக்கு ரூ. 1.75 கோடி பணம் கொடுத்திருந்தாராம். கொடுத்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை என்ற காரணத்தால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தன் மகள் மற்றும் மனைவியை காரின் பின் இருக்கையில் அமர்த்தி விட்டு, தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த கேஸ் சிலின்டரை திறந்தும், காரில் இருந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்து , மனைவி, மகளோடு தானும் இறந்து இருக்கிறார், பரிபூரனம். சம்பவ இடத்திற்கு வந்த அவர்களது உறவினர்கள் காரில் எலும்பு கூடாக இருந்த அவர்களை பார்த்து கதறி அழுதனர். போலீஸார் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.