சிறுசேரி தொழில்பேட்டை பகுதியில் இருக்கும் புதர் பகுதியில் எளிதில் நுழைய முடியாத காரணத்தால், அப்பகுதியில் ஏதேனும் தடயங்கள் ஏதாவது கிடைக்கிறதா என்று கண்டறிவதற்காக ஆளில்லா விமானத்தை பயன்படுத்த போலீசாரால் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளி களைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார் கூறுகையில், “பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதும், இது கழுத்து பகுதியில் கத்தியால் குத்தி திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்பதும் தெளிவாக தெரியவந்துள்ளது” என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2013-ல் மட்டும், 330 பெண்கள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மீட்கப்பட்டவர்கள் பெரும் பாலும் காதல் மற்றும் தகாத உறவு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதே போல் தான், உமா மகேஸ்வரியும் காணாமல் போயிருப்பார் என்று அலட்சியம் காட்டியதாக கூறி கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் சுப்பையாவை காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியமூர்த்தி சனிக்கிழமை சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டார்.
வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த சர்மிளா (38) என்பவர் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு துணி துவைக்கச் சென்றார். பின்னர், அங்குள்ள ஒரு புதரில் கழுத்து, கை மற்றும் காலில் வெட்டுக் காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இருதினங்களுக்கு முன்பு வேங்டமங்கலத்தில் ஓய்வுபெற்ற மாநகர பேருந்து ஓட்டுநர் அம்பிகாராஜ் (65) அவரது மனைவி கண்முன்னே வெட்டிக்கொல்லப்பட்டார். தொடர் கொலை சம்பவங்களால், கேளம்பாக்க பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.