பிரதீப் சாவன் என்ற 23 வயது வாலிபர், ராகேஷ் என்பவரின் மனைவியோடு, உறவு கொண்டிருந்த காரணத்தால், அதற்கு இடையூறாக இருந்த ராகேஷை கொலை செய்து இருக்கிறார்.
ராகேஷை, பிரதீப் கொலை செய்த விதமும், அவர் போலீஸிடம் பிடிப்பட்டதும் சுவாரஸ்யமான வகையில் உள்ளது.
ராகேஷ் ஒரு மோசமான குடிகாரர், இதை பயன்படுத்தி கொண்ட பிரதீப், அவருக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத நடு காட்டில், தான் நிறைய பணம் பதுக்கி வைத்து இருப்பதாக கூறி, அவரை அங்கு கூட்டி சென்று இருக்கிறார். அங்குள்ள ஒரு பெரிய கல்லை போட்டு, ராகேஷை கொலை செய்து இருக்கிறார். இந்த கொலை சம்பவம் ஜனவரி 9 அன்று நடந்து இருக்கிறது.
ஜனவரி 24 அன்று, வனத்துறை அதிகாரிகள், அடையாளமே தெரியாது இருந்த ராகேஷின் சடலத்தை பார்த்து இருக்கின்றனர். அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில், ஒரு மஞ்சள் நிற காகிதத்தில், 'பிரதீப்' என்ற பெயரும், மற்றுமொரு தொலைபேசி எண்ணும் எழுதப்பட்டு கிடந்தது. இதை பயன்படுத்தியே, போலீஸ் அதிகாரிகள் பிரதீப்பை நான்கு நாட்களாக தீவிரமாக தேடி, பிறகு கைது செய்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.