சமீபத்தில் தான் குஜராத் கலவரம் நடக்கும் போது, அதை தடுக்க இயலாத நரேந்திர மோடி 'இம்பொடென்ட்' என்று சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்.
இந்நிலையில் பரூகாபாத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையி்ல், “2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றம் இவரை விசாரணைக்கு அழைக்கவே இல்லை. ஆனால் மோடி தனக்கும் இக்கலவரத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறி வருவது, மழலையர் பள்ளியில் நற்சான்றிதழ் பெற்ற மாணவன், டாக்டர் பட்டம் பெற்றதாக நினைத்துக் கொள்வது போன்றது” என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.