நேற்று முன் தினம் நடந்த ஹோலி பண்டிகையின்போது வாரணாசி மக்கள் மோடியை போலவே இருக்கும் நபரை பார்த்து குழப்பம் அடைந்தனர். நகரின் கங்கை கரைகளில் நண்பர்களுடன் நரேந்திர மோடி உலவுவதாக தகவல்கள் பரவின. இதைப்பார்க்க வந்த கூட்டத்தினர் மோடியைப்போல் தோற்றம் கொண்டவரை பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவரது பெயர் அபிநந்தன் பாதக், உத்தரப் பிரதேசத்தின் சஹாரான்பூரை சேர்ந்த இவர், மோடியைவிட சற்று உயரம் குறைவானவர். பாஜகவில் உறுப்பினராக உள்ளார்.
இதைப் பற்றி அபிநந்தன் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "மோடி பிரதமராக வர வேண்டும் எனபல வருடங்களாக காத்திருக்கிறேன். அவரை போலவே நான் இருப்பதை பார்த்து பலரும் ஏமாந்து விடுகிறார்கள். இதன் பலனை மோடிக்கே அளிக்க வேண்டி வாரணாசியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்காக, பாஜக தலைமையிடம் அனுமதி கேட்டு காத்திருக்கிறேன்.’ எனக் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.