சோனியா, ராகுலுக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டு, "பாரதீய ஜனதா கட்சி மத்தியில் நிச்சயம் ஆட்சியில் அமரும். அதன் பிறகு சோனியா, ராகுல் இருவரும் துகில் உரியப்பட வேண்டும். அவர்களை இத்தாலிக்கே திருப்பி அனுப்ப வேண்டும். " என்று கூறினார்.
ஹீராலால் ரேகரின் இந்த பேச்சு இன்று காலை இணையத் தளங்களில் வெளியானது. இது காங்கிரஸ் தொண்டர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து ஹீராலால் எம்.எல்.ஏ. , "நான் பேசியதை தவறாக சித்தரித்து விட்டனர். நான் தனிப்பட்ட முறையில் யார் பெயரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. என்னுடைய இந்த பேச்சால், யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். " என்று தெரிவித்து இருந்தார். இருந்தாலும், பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது தேர்தல் கமிஷனில் புகார் செய்ய காங்கிரசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.