குஜராத்தில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 8-ம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். குஜராத்தில் ஊழலை எதிர்த்து போராடி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அவற்றை அம்பலப்படுத்த முயன்ற பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், உதாரணத்துக்கு 4 பெயர்களை குறிப்பிட்டார். மேலும், அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அந்த நால்வரின் ஆன்மாக்களும் சாந்தியடைய வேண்டிக் கொள்வதாக கூறினார்.
கெஜ்ரிவால் குறிப்பிட்ட 4 பெயர் கொண்ட பட்டியலில் ஒருவர் மட்டும் கடந்த 2010-ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்ற வாசலில் கொல்லப்பட்டார். மீதி 3 பேரும் தாக்குதல்களுக்கு பிறகு சிகிச்சை பெற்று உயிருடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
விவரங்களை முழுதாக அறியாமல் பேசியதனால், பாஜகவினரின் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார், கேஜ்ரிவால்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.