வடமேற்கு டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்த வாகனத்தில் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். பொது மக்களிடம் வாக்கு சேகரித்தபடி சென்ற அவருக்கு, மாலை அணிவிக்க வந்த ஒருவர் திடீரென அவரது கன்னத்தில் அறைந்தார். இதில் அவரது மூக்குக்கண்ணாடி உடைந்து விட்டதுடன் அவரது கன்னமும் வீங்கி விட்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது வலைத்தளத்தில் “என்னையே ஏன் தொடர்ந்து தாக்குகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை? இவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படுபவர்கள் யார்? அவர்களின் விருப்பம் என்ன? இதன் மூலம் அவர்கள் சாதிப்பது என்ன? நாட்டின் பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகுமா? அப்படி என்றால் என்னை அடிக்க நினைப்பவர்கள் நான் எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்கள். நான் அங்கு வருகிறேன். பின்னர் உங்களது விருப்பப்படி என்னை அடியுங்கள். ஆனால் இதற்காக நான் ஒருபோதும் பதில் தாக்குதல் நடத்தமாட்டேன். எனது இறுதி மூச்சு உள்ளவரை நேர்மையாக போராடுவேன்." என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.