வாரணாசியின் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக வளாகத்தின் அருகே ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வியாழக்கிழமை பேசும்போது அவர் மீது ஒரு இளைஞர் கூட்டம் கற்கள் மற்றும் செங்கற்களை வீசியதாகவும், கற்களால் தாக்குதலை நடத்தியவர்கள் நரேந்திர மோடிக்கு ஆதரவான வாசகங்களை கோஷமிட்டதாகவும் செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
சமீபகாலமாக கெஜ்ரிவால் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் மீது தாக்குதல்கள் நடக்கிறது. அதற்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து வாரணாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசுகையில், 'கன்னத்தில் அறை, முகத்தில் குத்து என ஆரம்பித்து நேற்று முன்தினம் கற்களால் தாக்கப்பட்டது வரை அனைத்து தாக்குதல்களுக்கும் பின்னால் காரணமாக இருப்பது பா.ஜ.க. தான்' என்றார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ.க.வின் குஜராத் மாநில தலைவர் சுனில் ஓசா 'வாரணாசி மக்கள் ஒருபோதும் முட்டை வீச்சு போன்ற தாக்குதல்களில் ஈடுபட்டதில்லை. கெஜ்ரிவாலுக்கு அவரது பாதுகாப்பு குறித்து கவலை என்றால் பா.ஜ.க. தொண்டர்களின் மூலமாக அவருக்கு பாதுகாப்பு அளிக்க எங்களால் முடியும்' என்றார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.