தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய திருச்சி வந்திருந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் நேற்று நிருபர்களை சந்தித்து கூறியதாவது:
இந்த தேர்தலில் பாஜக 272-லிருந்து 300 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும். நிச்சயம் மோடி பிரதமர் ஆவார். மத்தியில் பாஜக ஆட்சியமைக்க அதிமுக உள்ளிட்ட வேறு கட்சிகளின் தயவு தேவைப்படாது. தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சியிலிருக்கும்போது ஒருவரை யொருவர் பழிவாங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இவர்களுக்கு மாற்றாக இங்கு பாஜக ஐந்து கட்சிகளைச் சேர்த்து ஒரு வானவில் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த அணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் பாஜக அணி 20-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும்.
வைகோ போன்ற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்.
தமிழக மீனவர்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களின் நலன் காக்க தேசிய மீனவர் நல ஆணையம் உருவாக்கப்படும்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகம் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுப்போம்.
மோடி பிரதமரானால் நாடு பிளவுபட்டுவிடும் என்று சொல் வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குஜராத்தில் அவர் 12 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது அந்த மாநிலம் பிளவுபடவில்லை. காங் கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றை விழுங்கிவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்த நிலையை மாற்றுவோம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறினார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.