நாடு முழுதும் வீசிய மோடி அலையை தமிழ்நாட்டில் மட்டும் வீசாமல் அதிமுக அலை வீசியுள்ளது, அதிமுக தனித்து தேர்தலை சந்தித்தாலும் 37 தொகுதிகளில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது, இதற்கு அதிமுகவினர் தேர்தலுக்கு கடைசி நான்கு நாட்களில் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தது தான் காரணமா என்று அலசினால் அது மட்டும் காரணமல்ல என்று தெரிகிறது.
1) அதிமுகவினர் கச்சிதமாக ஓராண்டுகளுக்கும் மேலாக தேர்தல் பணி செய்தனர், ஓராண்டுக்கு முன்பே 40 தொகுதிகளிலும் நிற்கிறோம் வேலையை ஆரம்பியுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
2) அதிமுக தலைமை மீது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு மரியாதை கலந்த பயம் உண்டு, தேர்தலில் தோற்றால் பதவி தப்பாது என்பதும் அரசியல் வாழ்க்கை இறங்கு முகம் என்பதும் தெரிந்ததால் துடிப்பாக வேலை செய்தனர், ஆனால் திமுகவில் மாவட்ட பெரும் தலைகள் பலரும் வேட்பாளர் தேர்வில் அதிருப்தியில் இருந்ததால் தேர்தல் வேலை செய்யவில்லை
3) மின்வெட்டு விலைவாசி ஏற்றம் என்றெல்லாம் சிக்கல்கள் இருந்தாலும் மக்களுக்கு இன்னும் திமுக மீதான கோபம் மாறவில்லை
4) அதிமுக வேட்பாளார்கள் தேர்வில் பெரும்பாலானோர் புதுமுகங்களாகவும் இளைஞர்களாகவும் இருந்தனர், திமுகவிலோ மாவட்ட செயலாளார்கள் விருப்பத்தினால் தேர்வு செய்யப்பட்டவர்கள் வயதானவர்களாகவும் கட்சியில் செல்வாக்கில்லாதவர்களாகவும் இருந்தனர், திமுக மாவட்ட செயலாளர்கள் மாவட்டத்தில் கட்சியில் தங்கள் பிடியை தளரவிடாமல் இருக்க இப்படி சொத்தை வேட்பாளர்களை தேர்வு செய்தனர்
5) பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக இணைந்து உருவாக்கிய மூன்றாம் அணியில் கூட்டனிகட்சியின் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாத நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் மீது வெறுப்பில் இருந்த மக்களுக்கு அதிமுக மட்டுமே மாற்றாக தெரிந்தது.
6) ஆரம்பித்தில் இருந்தே ஊடகங்கள் அதிமுகவே அனைத்து இடங்களிலும் வெல்லும் என்று கணிப்புகளை வெளியிட்டபடி இருந்தனர், அதிமுகவினரும் முதல்வர் ஜெயலலிதாவும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் நாற்பதும் நமதே என்று வலம் வந்தனர், இந்த நம்பிக்கை அப்படியே வாக்காளர்களுக்கும் சென்று சேர்ந்தது எனவே ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று அதிமுகவினருக்கு வாக்களித்துவிட்டனர்
7) மோடிக்காக ஓட்டு போடலாம் என்றிருந்தவர்கள் கூட பாஜக போட்டியிட்ட இடங்கள் தவிர்த்து பிற இடங்களில் அதிமுகவிற்கே அதிக அளவில் வாக்களித்திருப்பதை 7 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட பாஜக வாங்கியுள்ள 5.2% வாக்குகள் தெரிவிக்கின்றன.
8) புதிய வாக்காளர்களை திமுக எந்தவிதத்திலும் கவரவில்லை, திமுகவின் மீது புதிய வாக்காளர்களுக்கும் மத்திய வர்கத்திற்கும் இருக்கும் கோபம் குறையவில்லை.
9) அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு கட்சிக்காரர்களால் எந்த தொந்தரவும் இல்லாதது அந்த கட்சியின் மீது பொதுமக்களுக்கு எந்த அதிருப்தியையும் ஏற்படுத்தவில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.