பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி பல தொகுதிகளை கைப்பற்றியது. சீமாந்திரா பகுதிக்குட்பட்ட 175 சட்டமன்ற தொகுதிகளில் 106-ஐ கைப்பற்றியதையடுத்து, தெலுங்கு தேசம்- பா.ஜ.க. கூட்டணி சார்பில் சீமாந்திராவின் புதிய முதல் அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் 2-ம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார். பதவியேற்றப் பின்னர் முக்கிய தேர்தல் வாக்குறுதியான 'விவசாயிகளின் கடன் தள்ளுபடி' தொடர்பான உத்தரவில் அவர் முதல் கையொப்பமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் கோதாவரி மற்றும் கடலோர மாவட்டங்களில் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள வசதியாக குண்டூரில் விழாவை நடத்துமாறு சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, 2-ம் தேதி குண்டூரில் நடைபெறும் கோலாகல விழாவில் சீமாந்திராவின் புதிய முதல் அமைச்சராக அவர் பதவியேற்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.