பெங்களூரில் உள்ள கண் பார்வையற்றவர்களுக்கான ஐ.டி.எல் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பி.கே.பால் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. இவரின் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள்,இசை கலைஞர்கள்,பாடகர்கள் என அனைவருமே பார்வையற்றவர்கள். கடந்த வியாழக்கிழமை கோடை விடுமுறைக்காக ஐ.டி.எல்.பார்வையற்றோர் இசைக்குழுவினர் பெங்களூரில் இருந்து மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மைசூர் அரண்மனையை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போது, ரஜினியின் புதிய படத்தின் ஷூட்டிங் பக்கத்தில் நடைபெறுவதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த தகவலை அறிந்து ஒரு வழியாக, ரஜினியின் 'லிங்கா' பட ஷூட்டிங் நடைபெறும் 'மேல்கோட்டை' என்னும் இடத்திற்கு சென்றனர்.
அங்கு இருந்த 'லிங்கா'படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசை சந்தித்து, 'ரஜினி சாரை பார்த்து பேசுவதற்காக ரொம்ப தூரத்தில இருந்து வர்றோம்.காலையில இருந்து மைசூர்,மண்டியா முழுக்க அலைஞ்சி திரிஞ்சி தேடினோம்.தயவு செஞ்சி அவரை சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க'என எல்லாரும் கேட்டிருக்கின்றனர்.
தகவல் அறிந்து, மழைக்காக கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரஜினி, அடுத்த நிமிடமே தானே குடையை பிடித்துக் கொண்டு,கட்டிய லுங்கியோடு அவர்களை சென்று சந்தித்து இருக்கிறார். 'என் முகத்தையே நீங்க பார்த்ததில்ல.வெறும் குரலை மட்டும் கேட்டு இப்படி பாசமாக இருக்கீங்களே? உங்களோட அன்புக்கெல்லாம் நான் என்ன பண்ண போறேன்? உங்களுக்காக நான் என்ன செய்யணும்.சொல்லுங்க' என அவர்களிடம் ரஜினி கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், "எங்களுக்கு எதுவும் வேணாம்.நீங்க நிறைய படத்துல நடிச்சால போதும்' என்று பதில் அளித்தனர்.
பிறகு ரஜினியை மகிழ்ச்சிவிக்க, பார்வையற்ற இசைக் குழுவினர் அனைவரும் சேர்ந்து,'பொதுவாக என் மனசு தங்கம்..ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்'என்ற பாட்டை பாடிக்காட்டியதும், மிகவும் மகிழ்ச்சி அடைந்த ரஜினி ,ஒரு கட்டத்தில் கண்கலங்கி, அவர்களை கட்டிபிடித்து ,முத்தம் கொடுத்தார். அதன் பிறகு அவர்களுக்கு டிபன் கொடுக்க சொல்லிவிட்டு, அவர்களுடன் இணைந்து சாப்பிட்டார். பிறகு, "பத்திரமா வீட்டுக்கு போங்க,பெங்களூருக்கு வந்து உங்களை ஒருநாள் கண்டிப்பா மீட் பண்றேன்"என்று கூறி அவர்களை வழி அனுப்பி வைத்தார் ரஜினிகாந்த்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.