ஏர்டெல் என்றாலே அதற்கு மறுபெயர் ஏமாற்றுத்தனம் என்று ஆகி விடும் போல. பேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு தான் வாட்ஸ் ஆப்பை வாங்கியது. வாட்ஸ் அப்புக்கு 500 மில்லியன் யூசர்கள் உள்ளார்கள். அதில் 50 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ளார்கள். எனவே அவர்கள் மூலம் ஏர்டெல் நிறுவனம் பணம் சம்பாதிக்க முடிவு செய்தது. ஏர்டெல்லும் வாட்ஸ் ஆப்பும் கூட்டு சேர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் பேக் என்னும் புதிய திட்டத்தை கடந்த மே மாதம் கொண்டு வந்தார்கள்.
இதன் விலை 36 ரூபாயில் இருந்து 49 வரை உள்ளது. இது நாம் எந்த மாநிலத்தில் இருக்கிறோம் என்பதை பொருத்து மாறும். இவர்கள் கூறியது என்னவென்றால் வாட்ஸ் ஆப் மட்டும் பயன்படுத்தி கொள்ள மாதம் 200 எம்.பி. இலவசமாக வழங்கப்படும் என்று . ஆனால் அந்த பேக்கை பயன்படுத்திய பலர் கூறும் புகார் என்னவென்றால் அந்த 200 எம்.பி.யில் இருந்து டேட்டா குறைவது இல்லை. நமது மெயின் பேலன்சில் இருந்து தான் பணம் குறைகிறது.
இது போல் பாதிக்கப்பட்ட ஒரு வாடிக்கையாளர் ஏர்டெல் கஸ்டமர் கேரை நாடியுள்ளார். முதலில் பேசிய ஒருவர் , அந்த பேக்குக்கான தொகையான 41 ரூபாயை திரும்ப தந்துவிடுவதாக கூறியுள்ளார். அந்த தொகை 4 மணி நேரத்தில் அவரது மொபைல் பேலன்சுக்கு வந்து விடும் என கூறியுள்ளார். ஆனால் 2 நாட்கள் ஆகியும், அந்த பணம் வரவில்லை. இது தொடர்பாக மேலும் 3 அதிகார்களுடன் பேசியுள்ளார். அவர்களும் 4 மணி நேரத்தில் பணம் வந்துவிடும் என்று தான் கூறுகிறார்கள் . ஆனால் பணமோ வந்த பாடு இல்லை.
அடுத்த நாளும் ஒருவருடன் பேசியுள்ளார். அந்த கஸ்டமர் கேர் ஊழியர் இவருக்கு சரியான பதில்களை தரவில்லை. கஸ்டமர் என்னும் மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். அவர்கள் திருடிய தொகையை இப்போது தர மறுக்கிறார்கள். அவ்வாறெனில் எதற்காக முதலில் பேசிய 3 ஊழியர்கள் பணத்தை தருவதற்கு ஒத்துக்கொண்டார்கள். கஸ்டமர் கேரில் கூட ஏமாற்றுகிறார்கள். இதனால் அந்த வாடிக்கையாளர் மனமுடைந்து உள்ளார். அவர் இழந்த 41 ரூபாய் பெரிய தொகை இல்லை என்றாலும் அவரை போல் எத்தனை பேர் இது போல் ஏமாந்துள்ளார்கள் என எண்ணி கவலைபடுகிறார். எனவே அந்த கஸ்டமர் கேர் உயர் அதிகாரிகளுடன் பேச முடிவு செய்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.