இப்போது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் எங்கு பார்த்தாலும் தெரியும் வார்த்தை, போட்டோ மற்றும் வீடியோ எது என்று பார்த்தால் அது ஏ.எல்.எஸ். ஐஸ் பக்கெட் சாலஞ் பற்றியதாக தான் இருக்கும். அந்த அளவுக்கு இது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. இது ஏ.எல்.எஸ் என்னும் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு சாலஞ் ஆகும். இது ஏ.எல்.எஸ். என்னும் நோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஆகும். இதில் பங்கேற்பவர் ஒரு பக்கெட்டில் ஐஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதனை அவர் மீது ஊத்தி கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை கைக்காட்ட வேண்டும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இது போல செய்ய வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டாலர் உதவியாக வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயை பற்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள். இது தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஒருவர் உயிரிழந்தார்.
அந்த நபர் பெயர் கோரி க்ரிப்பின், 27 வயது ஆகிறது. இவர் தான் ஐஸ் பக்கெட் சாலஞ் தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் ஒரு விபத்தில் உயிரிழந்தார். ஒரு டைவிங் ஸ்பாட்டில் குதிக்கும் போது தனது உயிரை இழந்தார். தனது நண்பர் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவர் இதனை தொடங்கினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.