ஒரிசாவில் தனது மனைவி டீ கொடுக்க லேட் ஆக்கியதால் அவரைக் கொன்ற பரிதாப சம்பவம் நடந்துள்ளது .
இந்த சம்பவம் குஹாலிப்பால் என்னும் கிராமத்தில் புதன்கிழமை நடந்தது . 56 வயதான மஹாலியா நாயக் தனது மனைவி ஜானாவிடம் டீ போட்டுக் கொடுக்க கேட்டுள்ளார் . டீ கொடுக்க கால தாமதம் ஆனதால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது .
இந்த விவாதம் புதன்கிழமை அன்று மீண்டும் வெடித்தது . இதனால் கோவமடைந்த நாயக் தனது மனைவியை கூர்மையான பொருளால் தாக்கியுள்ளார் . இதனால் அவரது மனைவி பரிதாபமாக இறந்தார் .
நாயக் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.