தமிழ்நாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் எவ்வாறு இயங்குகின்றன் என்பதை பார்ப்பதற்கு ஒடிசா மாநில அதிகாரிகள் நேற்று வந்து வருகை புரிந்தனர். தமிழகத்தில் இப்போது 6,823 கடைகள் உள்ளன. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது மதுபானங்கள் விலை உயர்ந்து உள்ளதால், கூடுதலாக 3000 கோடி வருமானம் வர உள்ளது.
எந்த முறையில் மதுபான பாட்டில்களை கொள்முதல் செய்கிறார்கள்? எத்தனை விதமான மதுபான ரகங்களை விற்பனை செய்கிறார்கள்? அந்த மதுபானங்களை கடைகளில் எப்படி விநியோகம் செய்கிறார்கள்? எவ்வளவு நேரம்? எந்த வகையில் விற்பனை செய்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒடிசா மாநிலத்தில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் வருகை புரிந்தனர். தமிழக அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் வந்து குடிகாரர்களிடம் டாஸ்மாக் குறித்து விசாரித்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.