இன்றைய உலகில் எல்லா குழந்தைகளிடம் விளையாட்டு பொருட்கள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்களிடத்தில் ஒரு ஸ்மார்ட்போன் கட்டாயம் இருக்கிறது. இதனை தான் அவர்கள் எப்பொழுதும் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் செல்லும் எல்லா இடத்துக்கும் அதனை எடுத்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் பெற்றோர் போன் செய்தால் மட்டும் அதனை எடுக்க தவறுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இருக்கும் இடம் அவர்கள் பெற்றோருக்கு தெரிந்து விடும் என்கிற பயம், இல்லையெனில் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று தெரிந்து விடும்.
இந்த பிரச்சனையை போக்க புதிய அப் வந்து விட்டது. இந்த அப் உங்களிடம் இருந்தால் போதும், உங்கள் குழந்தைகள் உங்கள் காலை கட்டாயம் எடுத்து தான ஆக வேண்டும். பெற்றோர் மற்றும் குழந்தையின் மொபைலில் இந்த அப் இருக்க வேண்டும். பெற்றோரின் போன் காலை அவர்கள் எடுத்த மறுத்தால் அவர்கள் மொபைலில் இன்டெர்னெட், கேம்ஸ் ,மற்றவர்களுக்கு கால் செய்வது என எதுவுமே வொர்க் ஆகாது . இதனால் பெற்றோரின் போன் காலை கட்டாயம் அட்டன்ட் செய்து தான் ஆக வேண்டும். அந்த அப் அழிக்க நினைத்தால் குழந்தைகளின் போன் லாக் ஆகி விடும். இந்த அப்பின் பெயர் Ignore no more.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.