சியோமியின் எம்.ஐ.3 மொபைலுக்கு இருக்கும் மவுசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை வாங்குவதற்காக ஒரு போரே நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் விற்பனைக்கு வந்த மொபைல் நொடிகளில் விற்று தீர்ந்து விடுகிறது. முதல் 3 ரவுண்டில் 35 ஆயிரம் மொபைல்கள் விற்று தீர்ந்து இருந்தன. 4 வது ரவுண்டு 12 ஆம் தேதி அன்று நடந்தது. அதில் 20 ஆயிரம் மொபைல்கள் விற்பனைக்கு வந்தன. அவை அனைத்தும் 2.4 செகன்டுகளில் விற்று தீர்ந்து விட்டன.இன்று விற்பனைக்கு வந்த 20 ஆயிரம் மொபைல்கள் 2.3 செகண்டுகளில் விற்று தீர்ந்தது. 6 வது ரவுண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவு செய்வதற்கான நேரம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
இந்த மொபைல் பிளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் தான் கிடைக்கும். இதனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என சிலர் தவம் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.