கடந்த வாரம் +2 படிக்கும் 17 வயது மாணவர் டெல்லியில் உள்ளா "ஜூ"வில் வெள்ளைப்புலி இருந்த ஆழமான கிணறு போன்ற பகுதியில் தவறி விழுந்துவிட்டார், அங்கிருந்த வெள்ளைப்புலி அவரை அடித்து கொன்றது முழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது, ஜூ ஊழியர்களால் அந்த மாணவர் இறந்த பின்பு தான் அந்த புலியை பயமுறுத்தி கூண்டில் அடைக்க முடிந்தது. மாணவர் எப்படி அதில் விழுந்தார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன, கிணறு போன்ற அந்த கூண்டு தடுப்பு சுவர் சிறியதாக இருந்ததால் தவறி விழுந்ததாகவும், மாணவர் ஆர்வத்தில் மேலே ஏறி பார்த்த போது தவறி விழுந்ததாகவும் கூறுகிறார்கள். அந்த மாணவர் பெயர் மஸ்கூத் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இப்போது அதில் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. எல்லாவற்றையும் பதிவு செய்த தடவியல் துறையினரிடம் இருந்து புது தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. அந்த புலி மாணவனை கொல்ல வேண்டும் என நினைக்கவே இல்லை. சுமார் 15 நிமிடங்களுக்கு அந்த புலி அந்த மாணவனை பார்த்து கொண்டு தான் இருந்தது. அப்போது புலியை திசை திருப்புவதற்காக அங்கு இருந்தவர்கள் அதன் மீது கல்லை எறிந்தார்கள். அந்த கற்களில் இருந்து மாணவனை காப்பாற்ற நினைத்தது புலி . அதனால் தான் மாணவனை தனது வாயில் கவ்வி கொண்டு ஒடியது. புலி தனது குட்டிகளை வாயில் கவ்வி கொண்டு தான் ஒடும். அப்போது எதிர்பாராத விதமாக புலியின் வாயில் இருந்த மாணவர் காயமடைந்து இறந்தார். அந்த மாணவனின் கழுத்தை தவிர வேறு எங்கும் அடிபட வில்லை. இப்போது இந்த சம்பவத்தில் இது புதிய திருப்பமாக அமைந்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.