பிரபல பிண்ணனி பாடகரான கே.ஜெ.யேசுதாஸ் பெண்கள் ஜின்ஸ் அணிவது குறித்து தனது கருத்தை தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பி உள்ளார் .
காந்தி ஜெயந்தி விழா கொண்டாட வருகை தந்த கே.ஜெ.யேசுதாஸ் அளித்த பேட்டியில் , " பெண்கள் ஜின்ஸ் அணிவதனால் அது அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கு தொல்லை தரக் கூடாது . எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைந்தே இருக்க வேண்டும் . எளிமையும் , அன்பையும் போன்ற உயர்ந்த குணங்களைக் கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு இது போன்ற ஆடைகள் எதிரானது " என்றார் .
இவரின் கருத்திற்கு ,இது பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரானது இதனை ஒரு போதும் ஏற்ற்க் கொள்ள முடியாது என மகிளா காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.