பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தில் பதற்றமான சுழ்நிலை நிலவி வருவதாகவும் , அதனால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சுழ்நிலை நிலவி வருவதாக தெரிவித்தார் . அவர் அளித்த அறிக்கையில் , " தமிழகத்தில் ஜெயலலிதா கைதான பிறகு இழிவான மற்றும் வெட்கக்கேடான செயல்கள் நடந்து வருவதாகவும் , இதனால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்கியை ஒரு வருடத்திற்கு அமல் படுத்தி , பின்னர் தேர்தல் நடத்த வேண்டும் " என்றார் . மேலும் வன்முறையில் ஈடுபடுவோர்களையும் , தேசத் துரோக சக்திகளையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.