BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 12 August 2013

ஜெமோவை அவமானபடுத்திய ஈரோட்டு காக்காக்கள்.

சென்ற எட்டாம் தேதி ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை நடத்தும் புத்தக திருவிழாவிற்கு ஜெயமோகனும், மனோதத்துவ மருத்துவர் ருத்ரனும் பேச அழைக்கபட்டிருந்தனர், மருத்துவர் ருத்ரன் அவரது சொந்த பிரச்சனைகள் காரணமாக வரமுடியவில்லை என்று தெரிகிறது, அவருக்கு பதிலாக ஈரோட்டை சேர்ந்த வேறொரு மனோதத்துவ மருத்துவர் பேச மாற்றப்பட்டிருந்தார்.

முதலில் ஈரோட்டை சேர்ந்த மாணவர்கள் பேசியிருக்கிறார்கள், ஜெயமோகன் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் கூட்டம் கலைந்து அரங்கம் வெறிச்சோடிவிட்டது என தெரிகிறது, ஆகையால் ஜெயமோகன் தமது பேச்சை வெகு சீக்கிரம் முடித்து கொண்டார் என்றும் தெரிகிறது, நிகழ்ச்சி முடிந்து  அது குறித்து ஈரோடு உரை என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியிருந்த கட்டுரையில் ஜெயமோகன் ஈரோட்டு மக்களை காக்கா கூட்டம் என்று எழுதியிருப்பதாக தெரிகிறது, இது குறித்து நமது செய்தியாளர் ஈரோட்டு புத்தக வாசகர்களிடம் தொகுத்த கருத்துகளை இங்கே பதிவிடுகிறோம்.

நான் ஒரு புத்தக பிரியன், புத்தக திருவிழா எங்கே நடந்தாலும் சென்று விடுவேன், இரண்டு வருடங்களுக்கு முன் கோவையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த போது அன்று ஜெயமோகனின் பேச்சை கேட்டேன். கிட்டதட்ட ஒரு மணிநேரம் ஒரு மனிதனின் ஞாபக சக்தியை பற்றி பேசி சலிப்பூட்டினார். அவர் அங்கு எந்த புத்தகத்தையும் அறிமுகபடுத்தவில்லை. வாசிப்பின் மகத்துவத்தை பற்றியும் பேச வில்லை, அப்போதே தெரிந்து விட்டது ஜெயமோகன் மேடை பேச்சுக்கு லாயக்கற்றவர் என்று, அதனால் எட்டாம் தேதி நடந்த கூட்டத்தை நான் புறக்கணித்து விட்டேன்.

தான் ஒரு மேடை பேச்சாளன் அல்ல என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார், அப்படியானால் பேச அழைக்கும் போதே அது மறுத்து புத்தக வெளியீட்டிற்கோ அல்லது புத்தகம் வாங்கவோ மட்டும் நான் வருகிறேன், பேச முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும், நான் மேடை பேச்சாளன் இல்லை என்று சொல்ல தெரிந்த ஜெயமோகனுக்கு பேச முடியாது என்று சொல்ல என்ன தயக்கமோ.

ஈரோட்டில் அவரது புத்தகங்களை வெளியிடும் போது ஈரோட்டு மக்கள் காக்கா கூட்டம் என்று தெரியவில்லையா? இவர் என்ன பேசினாலும் உட்கார்ந்து கேட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லையே. இவரது கட்டுரையில் ஒரு முறை மூத்த நடிகர்களை அவமானபடுத்தும் விதமாக எழுதியிருந்தாக ஒரு பத்திரிக்கை மூலம் படித்திருக்கிறேன். இவருக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்துவிட்டு போகட்டுமே, ஏன் ஈரோட்டு மக்களை காக்காகூட்டம் என்று சொல்ல வேண்டும்.

திராவிட சிந்தனையுள்ள பதிப்பாளர் ஒருவர்:
சில தினங்களுக்கு முன் ஜெயமோகனை ஒருவர் அண்ணா எழுதியவற்றை படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு அவரது கட்டுரையில் எப்படி என்னை பார்த்து அந்த கேள்வி கேட்கலாம் என்று  பொங்கியிருந்தார், அந்த கேள்வின் உள்ளர்த்தம் புரியாமலேயே, சட்டையை பிடித்து தூக்கி திராவிடம்  பற்றி படித்ததுண்டா? அதன் வரலாறு தெரியுமா? அதை பற்றி தெரியாமல் இந்து ஞானமரபு பற்றி பேச இங்கிருந்து உமக்கு என்ன வேலை என்பதன் சுருக்கமே அந்த கேள்வி. புத்தகத்தை பணம் கொடுத்து வாங்குவது எப்படி வாசகனின் உரிமையோ அதே போல் தான் பேச்சை கேட்பதும் அதை புறக்கணிப்பதும், ஈரோட்டு மக்களை காக்கா கூட்டம் என்று சொல்லியது மிகவும் கண்டனத்துகுறியது.

# ஜெமோகனுக்கு நாக்குல சனி போல


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media