தலைவா படம் வெளியிடுவதற்கு தடையாக இருப்பது சில அரசியல் காரணங்களே என ஆங்காங்கே பேச்சு நிலவினாலும் உண்மையான காரணம் வேறு என தற்பொழுது வேறு காரணங்கள் வெளியாகியுள்ளது.
சென்ற ஆட்சியின் போது தமிழில் பெயர் வைத்தாலே கேளிக்கை வரி ரத்து செய்யபட்டது 100 ரூபாய்க்கு 28 ரூபாய் வரை கேளிக்கை வரி அரசுக்கு செலுத்துவது இழப்பானது, ஆனாலும் தியேட்டர் அதிபர்கள் முன்பிருந்த அதே விலைக்கே டிக்கெட் விற்று கொண்டிருந்தார்கள் சுருக்கமாக சொல்வதென்றால் கொள்ளை லாபம் அடைந்து கொண்டிருந்தார்கள்.
இந்த ஆட்சியில் கேளிக்கை வரி குறித்து சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது, படத்தின் தலைப்பு தழிமில் இருந்தாலும் படத்தின் காட்சிகள் வன்முறையை தூண்டாத வண்ணமும், முகம் சுழிக்க வைக்காத காட்சிகளும் இருந்து சென்ஸார் குழுவினரால் “யூ” சான்றிதழ் பெற்றால் மட்டுமே கேளிக்கை வரியிலிருந்து விலக்கு என அறிவித்தது.
தலைவா படத்தில் நாயகன் சட்டத்தை தாமே கையில் எடுப்பது போலவும், பல வன்முறை காட்சிகளும் இடம்பெறுவதால் அப்படத்திற்கு “யூ” சான்றிதழ் தரப்படவில்லை, பெரிய நடிகர்களின் படங்கள் மொத்த பட்ஜெட்டில் பாதி அவர்களது சம்பளத்திற்கே போவதால் நிச்சயம் அதிக விலைக்கே விநியோகிஸ்தர்கள் வாங்க வேண்டும். மினிமம் கேரண்டி என்ற முறையில் முன்பணமா ஒரு தொகையை பெற்ற பின்னரே தியேட்டர்களுக்கு வெளியிடும் உரிமை வழங்கப்படும்.
விஜய் நடிக்கும் தலைவா படத்தை வெளியிடுவதால் பல தியேட்டர் அதிபர்கள் பெருமளவு நட்டத்தை சந்திக்க நேரிடலாம் என்பதால் அப்படதை வெளியிட தயங்குகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது, மேலும் தமிழகத்தில் வெளியாவதற்கு முன்பே பல மாநிலங்களில் படம் வெளியாகி படம் பற்றி நல்லமுறையான விமர்சனம் இல்லாததால் அவர்களது தயக்கம் அதிகமானது.
# தியேட்டர்ல பாம் வைப்போம்னு சொன்னது யாருங்கண்ணா!

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.