சமீபத்தில் பெல்லாரி வெங்காய விலை உயர்ந்து உணவங்களில் ஆம்லெட் கேட்டால் வெங்காயத்திற்கு பதில் முட்டைகோஸ் போட்டு ஆம்லெட் போட்டு கொடுத்தார்கள், தற்பொழுது டீக்கடையில் டீ கேட்டால் டீயில் பாலுக்கு பதில் எதை ஊற்றி தருவார்களோ என்ற அச்சத்தை தருமளவுக்கு பால் விலையும் உயர்ந்து விட்டது.
பண வீக்கம் வெடிக்கும் அளவுக்கு வீக்கி கொண்டு போகிறது, அரசு அதை கட்டுப்படுத்த தவறி விட்டது என பல பொருளாதார வல்லுனர்கள் தொடர்ந்து கூறி வந்தாலும் மத்திய அரசிற்கு எதாவது ஒரு மசோதாவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற குறிக்கோளில் மற்றவை எதுவும் காதில் விழுவதில்லை, என்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தனியாரே நிர்ணயிக்கலாம் என தனியார் வசம் நாட்டை கொடுத்தார்களோ அன்றே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதியாக பத்தாயிரம் மதிப்புள்ள இலவசங்களை நாம் பெறுகிறோம், மறுப்பதற்கில்லை மகிழ்ச்சி தான் ஆனால் எத்தனை லட்சங்கள் உயர்த்தபட்ட பேருந்து கட்டணம், மின்சாரகட்டணம் வாயிலாக நாம் அரசுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்களா? இதோ நாட்டு மக்களுக்கு அடுத்த ஆப்பு.
மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் உணவு பொருட்களில் மிக முக்கியமான பாலின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் இன்றிலிருந்து உயர்த்தப்பட இருக்கிறது, அதுவும் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் தனியார் நிறுவனங்களான திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி ஆகியவற்றின் விலை, இதை தவிர ஆங்காங்கே இருக்கும் சிறு பால்பண்ணை உரிமையாளர்களுன் இன்றுமுதல் பால்விலையை உயர்த்தி விடுவார்கள்.
தற்பொழுது கொழுப்பு நீக்கப்பட்ட பால் 30 ரூபாய்க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் 34 ரூபாய்க்கும், கொழுப்பு நீக்கப்படாத பால் 38 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. விலை உயர்த்தப்படும் என்ற அறிக்கை வந்தவுடன் பொதுமக்களை விட பால் விற்கும் சிறு வியாபார முகவர்களிடம் இருந்து முதல் எதிர்ப்பு கிளம்பிவிட்டது.
மாடு வளர்க்கும் விவசாயிகளிடம் பாலில் இருக்கும் கொழுப்பு அளவை வைத்து கொள்முதல் செய்யும் பண்ணைகள், அதை பதப்படுத்தி முகவர்கள் மூலமாக சில்லறை செய்து வருகிறது, பால் விலை ஏறும் அதே வேளையில் விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தப்பட்ட தகவல் இல்லை, சில்லறை வியாபார முகவர்களுக்கு கமிஷன் தொகை உயர்த்தபட்டதாக தகவல் இல்லை. அடுத்த பெட்ரோல் நிறுவனமா பால் பண்ணைகள் என்ற கேள்வி எழுகிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.