மிக எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய வித்தியாசம் தான், சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும் உள்ள வித்தியாசம். சேமிப்பு என்பது நமது பணத்தை சில வருடங்களில் இரட்டிப்பாக்கி தராது. திருட்டு, எதிர்பாராத விபத்து தவிர நமது பணம் நம்மிடமே இருக்கும். ஆனால் முதலீடு என்பது சில நேரங்களில் காணாமல் போகலாம் சில நேரங்களில் பல மடங்கு அள்ளித்தரலாம்.
உலகெங்கும் மக்கள் முதலீட்டிற்கு பயன்படுத்துவது அவர்களது வயசை பொறுத்து மாறுகிறது, தங்கள் முதலீட்டிற்கு பாதுகாப்பு வேண்டும் என நினைப்பவர்கள் அதை அரசாங்க பாண்டுகளில் முதலீடு செய்கிறார்கள், சிலர் நல்ல நிறுவன பங்குகளில், சில வங்கி தரும் வட்டி விகிதமே போதும் என்று நிரந்தர வைப்பு நிதியில், சிலர் ரியல் எஸ்டேட்டில் ஆனால் அனைவரும் இதிலா, மாட்டோம் என்று சொல்லாத ஒன்று தங்கம்.
அதற்கான காரணமும் இருக்கிறது, நம் கண் முன்னே அதன் வளர்ச்சியை பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். நம் பாட்டி காலத்தில் சவரன் 300 ரூபாய்க்கு விற்றது, நம் அம்மா காலத்தில் சவரன் 3000 ரூபாய்க்கு விற்றது, நம் காலத்தில் 30000 க்கு அருகில் பார்த்து விட்டோம், இனி அடுத்த தலைமுறை காலத்தில் சவரன் மூன்று லட்சமாகும் என்பதே லாஜிக். இடையிடயே சின்ன சின்ன கரைக்ஷன் வந்தாலும் தங்கம் என்றும் ஏமாற்றாத முதலீடு என்று பெரும்பான்மை மக்கள் நம்புகிறார்கள்.
தங்கம் விலையின் அசுர வளர்ச்சிக்கு காரணமும் அதுவே, இந்தியாவை தவிர பிற நாடுகளில் தங்கத்தை ஆபரணமாக அணிவது குறைவு, உலகில் தங்கம் பயன்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கும் சீனா கூட பொம்மைகள், நினைவு பொருட்கள் செய்யவே தங்கத்தை அதிகம் பயன்படுத்துகிறது. ஆனால் எல்லா நாட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் வாங்கி வைப்பது தங்க காசுகள். அதிகமான செய்கூலி, சேதாரம் இல்லை. திரும்பி விற்கும் பொழுது அதிக இழப்பும் இல்லை என்பதால் தங்கம் சிறந்த முதலீடாக இருக்கிறது.
தொடர்ச்சியான பண வீக்கம் காரணமாக தங்கம் டாலர் மதிப்பில் இறங்கி வந்தாலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் தங்கத்தின் விலை குறையாமல் இருக்கிறது, மேலும் கடந்த ஆறு மாதங்களில் இருமுறை தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 4% உயர்ந்துள்ளது. தொடந்து நமது பணம் அந்நியநாட்டில் முதலீடு செய்வது போல் தான் தங்கம் வாங்குவது. அதற்காக தான் அதன் மீது வரி உயர்த்தப்பட்டது.
என்ன தான் வரி விதித்தாலும் மக்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் குறையப்போவதில்லை, அதனால் நிதி அமைச்சரே தங்க வாங்க வேண்டாம் என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார், யாரும் கேட்பதாக தெரியவில்லை. தற்பொழுது அரசின் மறைமுக உத்தரவின் பெயரில் நகைக்கடைகளில் தங்ககாசுகள் விற்கப்பட மாட்டாது என அறிவிக்கபட்டுள்ளது.
# பண வீக்கத்துக்கு மருந்து கிடைக்கல போல அரசுக்கு

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.