ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களை கேவலமாகவும், அவர்களை தீவிரவாதிகள் போலவும் சித்திரித்து எடுக்கப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான மெட்ராஸ் கஃபே என்ற படம் இன்று இந்தியா முழுவதும் ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியாக இருக்கிறது.
கடந்த இரு தினங்களாகவே தமிழகமெங்கும் மாணவர்கள் திரண்டு இத்திரைபடத்திற்கு எதிராக ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். தமிழ் ஆர்வலர்களும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என பல்வேறு வழக்குகளின் கீழ் வாதாடி வருகிறார்கள்.
இப்படம் வெளியிடுவதால் தமிழக மக்களின் தமிழக மக்களை புண்படும் பட்சத்தில் இப்படத்தை வெளியிடாமலேயே இருப்போம் என தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி.ராமநாதன் தெரிவித்துள்ளார். இதே கருத்தையே பல திரையரங்கு உரிமையாளர்களும் சொல்லி வருகிறார்கள்.
ராஜிவ்காந்தி கொலை சம்பவத்தை முன்வைத்து குற்றபத்திரிக்கை என்ற படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இத்திரைப்படத்தை பற்றி கூறுகையில் , இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஈழப்போராட்ட வீரர்களை தீவிரவாதிகள் போல் காட்டுவதிலேயே முனைப்பாக இருக்கிறது. ஒரு இடத்தில் கூட இலங்கை ராணுவம் செய்த அத்துமீறல்கள், கொடுஞ்செயல்கள் பற்றி காட்டப்படவேயில்லை. இவ்வாறு நடுநிலமையற்ற திரைப்படத்தை திரையிடுவது சினிமா உலகத்தையே கேவலபடுத்துவது போலாகும் என்று கூறியுள்ளார்.
இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான ஜான் ஆபிரஹாம், தான் ஒரு சினிமாவாகவே எடுத்திருப்பதாகவும், எந்த இடத்திலும் தமிழர்களை கொச்சை படுத்துவது போல் காட்சி அமைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். மத்திய அரசின் கட்டுபாட்டில் இருக்கும் சென்சார்போர்டு இப்படத்திற்கு அனுமதி வழங்கிவிட்டாலும் இப்படத்தை பார்த்த தமிழர்கள், இத்திரைப்படம் தமிழர்கள் நெஞ்சில் நஞ்சை கலக்கும் ஆயுதம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் வெளியிட முடியாமல் சர்ச்சைக்குள்ளாயிருக்கும் மூன்றாவது படம் இது. கமலஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமிய அமைப்புகளால் தடைகோரபட்டு பின் சில காட்சிகள் நீக்கிய பின் திரையிடபட்டது. சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த தலைவா படம், தியேட்டருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் வெளியாகாமல் பின் Time to Lead என்ற வாசகத்தை போஸ்டரில் இருந்து எடுத்ததோடு அல்லாமல் சில காட்சிகளில் சப்தத்தை மட்டும் எடுத்து வெளியானது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.