மும்பை லைஃப் ஸ்டைல் பத்திரிக்கையை சேர்ந்த 22 வயது போட்டோ கிராஃபர் தன்னுடன் வேலை பார்ப்பவருடன் மாலை ஐந்து மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், மகாலட்சுமி நகர் பகுதியில் பூட்டிகிடக்கும் ஒரு மில் அருகே ரயில்வே கேட்டை கடக்க வண்டியின் வேகத்தை குறைத்த பொழுது வழிமறிக்கபட்டு வாகனம் ஓட்டி வந்த நண்பர் அடையாளம் தெரியாத ஐந்து நபர்களால் தாக்கபட்டார்.
பின் அந்த ஐந்து நபர்களால் கொடுரமாக வன்புணர்விற்கு ஆளாகி மயக்க நிலை அடைந்தார். அவரது நண்பர் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார், அப்பெண்ணின் உறவினர்கள் இது குறித்து காவல்துறையிடம் புகார் அழித்து உள்ளார்கள்.
அப்பெண்ணிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அப்பெண்னின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தொடர் ரத்தபோக்கினால் அப்பெண் அவதிகுள்ளாவதாகவும் தெரிவித்துள்ளார். இக்குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை விரைவில் கைது செய்வோம் என காவல்துறை தரப்பு சொல்லியிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக இருப்பது பெண்களின் மத்தியில் பெரும் அச்சத்துகுள்ளாக்கியிருக்கிறது.
# பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான சட்டம் வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.