ஆந்திராவிலும் வாரிசு போர் துவங்கிவிட்டதாம், தெலுங்கு தேசம் கட்சியில் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் இளைஞரணியின் தலைவராக நியமிக்கப்பட்டு கட்சி விழாக்களில் முன்னிலைப்படுத்தப்படுகிறார். இது
கட்சிக்குள்ளேயே இருக்கும் இன்னொரு பிரபலமான நடிகர் ஜூனியர் என்டிஆருக்கும், அவரது தந்தை ஹரிகிருஷ்ணனுக்கும் வருத்தத்தைத் தந்திருக்கிறதாம்..
ஏதோ ஒரு இடத்தில் ஜூனியர் என்டிஆரின் புகைப்படத்தை வைத்து கட்சியினர் பேனர் வைத்திருந்ததற்கு ஜூனியரின் சித்தப்பாவான நடிகர் பாலகிருஷ்ணா கண்டனம் தெரிவிக்க.. இதனை இவரது அண்ணன் ஹரிகிருஷ்ணன் கண்டிக்க.. பிரச்சினை குடும்பத்திற்குள் பூதாகாரமாகியிருக்கிறது..! இதன் விளைவாக நடிகர் பாலகிருஷ்ணாவின் இளைய மகள் திருமணத்திற்கு ஹரிகிருஷ்ணன் குடும்பத்தினர் வராமல் புறக்கணித்திருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் சொல்கின்றன.
நடிகர் பாலகிருஷ்ணாவும் லோகேஷை முன்னிலைப்படுத்தி ஆதரிக்கிறார். காரணம் இல்லாமல் இல்லை.. லோகேஷ், பாலகிருஷ்ணாவின் முதல் மகள் தேஜஸ்வாணியின் கணவர்..! இப்போ அண்ணன் மகனைவிட மருமகனே முக்கியம்ன்னு சொல்றாராம் பாலையா..!
சந்திரபாபு நாயுடு மாதிரி அழுத்தமான ஆளை இந்திய அரசியல்லேயே பார்க்க முடியாது. ரொம்ப வித்தியாசமான பார்ட்டி. ஒரே கட்சிக்குள்ளே.. ஒரே குடும்பத்துக்குள்ள நடக்குற இந்த சண்டையை தெரிஞ்சுக்காத மாதிரியே சுத்திக்கிட்டிருக்காராம்..தெலுங்கானா பிரச்சனை பெருசா வெடிக்கும் பொழுது நிச்சயம் தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும். அப்ப சண்டை போட்டுகிட்டு இருந்தா கட்சி என்னாவது என்ற எண்ணமாக இருக்கலாம்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.