தொடர்சியான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாக மீண்டும் சரக்கு ரயில் கட்டணம் உயரும் என ரயில்வே துறை இணை அமைச்சர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறினார், இந்த கட்டண உயர்வு வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்
இனி ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ரயில்வே சரக்கு கட்டணமும் எரிபொருள் விலை ஏற்ற, இறக்கத்திற்கேற்ப மாறுபடும் என்றும், எரிபொருள் விலை குறையும் பட்சத்தில் நிச்சயமா ரயில்வே சரக்கு கட்டணம் குறைக்கப்படும் என்றும் கூறினார்
பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட பொழுது, தற்பொழுது பயணிகள் கட்டணம் உயர்த்தபட்டாது, இதற்கென்று ரயில்வே கட்டண ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு அரசிடம் கட்டணம் உயர்வு குறித்து பரித்துரை செய்யப்பட்டும் என்றார்
ரயில்வேதுறையை நவீனபடுத்துவது குறித்து பேசுகையில், இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்த 5.6 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும், அவை அனைத்தையும் ரயில்வே துறையே மொத்தமாக கொடுக்க இயலாது, ஆகவே ரயில்வே துறையை மேம்படுத்த அதில் தனியார் துறைகள் பங்கேற்க வேண்டும் என்றும் , தொலைபேசி துறையில் தனியார்களின் 82% பங்களிப்பே அதன் முன்னேற்றத்திற்கு காரணம் என்றும் கூறினார்.
மேலும் கூறுகையில் ரயில்வே துறையில் சீனா அடைந்திருக்கும் வளர்ச்சி மகத்தானது, ரயில்வே வளர்ச்சியில் நாம் சீனாவை பின் பற்ற வேண்டும் என்றும், இந்தியாவிலிருந்து நமது அண்டை நாடான சீனாவுக்கு ரயிலில் செல்வதே எனது ஆசை என்றும் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.